அறிவுக்குப் பொருந்தாத விஷயமாகும்

கோலாலம்பூர், ஏப்ரல்.14

ரவூப்பில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ளூர்வாசிகள் சட்டவிரோதமாக டுரியான் மரங்களை நடவு செய்ததாகக் கூறும் நில மற்றும் கனிம வள இலாகா, இந்த விவகாரம் கடந்த 20 ஆண்டு காலமாக அவர்களுக்கு எவ்வாறு தெரியாமல் போனது என்று பிரபல முன்னாள் பத்திரிகை ஆசிரியர் ஏ. காடீர் ஜாசின் கேள்வி எழுப்பினார்.

ஆயிரக்கணக்கான நிலங்களில் சட்டவிரோதமாக டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அமலாக்கத் தரப்பினர் கூறுவது, அறிவுக்குப் பொருந்ததாக விஷயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்தைக் கோரும் போது, டுரியான் மரங்களை நடவு செய்தவர்களால் அந்த நிலத்தை கொடுக்க முடியாத நிலையில் உடனே நிலத்தில் அத்துமீறி நுழைந்து விட்டனர், சட்டவிரோதமாக உள்ளனர் என்ற விவகாரம் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக மெடியா பெர்டானாவின் முன்னாள் ஆலோசகரான காடீர் ஜாசின் வர்ணித்தார்.

யாருக்குமே தெரியாமல் நடு காட்டிற்குள் அவர்கள் டுரியான் மரங்களை நடவு செய்துள்ளனர் என்று கூறுவது அறவே ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று தேசிய பத்திரிகையாளர் விருதுப் பெற்றவராக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS