குவாந்தான், ஏப்ரல்.15-
பகாங், ரவூப்பில் மூசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பில் அரசு பணியாளர்கள் கடமையாற்றுவதிலிருந்து தடுத்ததாகக் கூறப்படும் ரவுப் டிஏபி எம்.பி. சோவ் யூ ஹுய்க்கு எதிராக விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
ரவூப் டுரியான் மரங்களை நடவு செய்த உள்ளூர்வாசிகளின் நலன் பேணும் அமைப்பான சம்கா தலைவரான சோவ் யூ ஹுய், நேற்று மாலையில் ரவூப் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பகாங் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக நடவு செய்ததாகக் கூறப்படும் 20 ஆண்டு கால 200 க்கும் மேற்பட்ட டுரியான் மரங்களை வெட்டிய அமலாக்கத் தரப்பினருக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, சோவ் யூ ஹுய் கைது செய்யப்பட்டார்.