கோலாலம்பூர், ஏப்ரல்.15
மனித வள அமைச்சின் கீழ் உள்ள மனித வள மேம்பாட்டு கழகமான எச்ஆர்டி கோர்ப்பின் தலைமை செயல் முறை அதிகாரி பொறுப்பிலிருந்து ஷாகுல் ஹமீது சையிக் டாவுட் பதவி விலகினார்.
மனித வள மேம்பாட்டு நிதியகத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலமாகத் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த ஷாகுல் ஹமீது பதவி விலகல் தொடர்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை காணொளி எச்ஆர்டி கோர்ப் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
எச்ஆர்டி கோர்ப் தலைமைப் பொறுப்பை வகித்த இந்த ஐந்தாண்டு காலக் கட்டத்தில் தமக்கு எல்லா நிலைகளிலும் உறுதுணையாக இருந்து, அதன் நிதியகத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பாடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஷாகுல் ஹமிது தமது நன்றியைத்க் தெரிவித்துக் கொண்டார்.
தாம் எச்ஆர்டி கோர்ப் பதவியில் இருந்ததற்கு நீங்களே காரணமாகும். தம்மைப் பெருமைக்குரியவராக ஆக்கிய பங்கு, பணியாளர்களையே சேரும் என்று மிகத் தன்னடக்கமாக ஷாகுல் ஹமீது நன்றி பெருக்குடன் கூறினார்.