அப்துல்லாவிற்கு இறுதி மரியாதை செலுத்த நஜீப்பிற்கு அனுமதி

கோலாலம்பூர், ஏப்ரல்.15-

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாவின் மறைவைத் தொடர்ந்து அவரின் நல்லுடக்கு இறுதி மரியாதை செலுத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நஜீப் செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து அவருக்கு இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

அப்துல்லாவிடமிருந்து நாட்டின் ஆறாவது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசலில் அப்துல்லாவின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

இன்று நடைபெறவிருந்த நஜிப்பிற்கு எதிரான 1எம்டிபி வழக்கு விசாரணையையும், உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா ஒத்தி வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

அப்துல்லா நாட்டின் பிரதமராக பொறுப்பில் இருந்த போது நஜீப் துணைப்பிரதமாக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS