கோலாலம்பூர், ஏப்ரல்.15-
பிறந்தது முதல், இருதயக் குறைப்பாட்டிற்கு ஆளாகிய சிலாங்கூர், சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி மாணவி ஹர்ஷித்தா சாய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குப் பயணமானார்.
அமெரிக்காவில் போஸ்தனில் உள்ள பிரபல சிறார் மருத்துவ சிகிக்சை மையத்தில் தங்கி, சிகிச்சைப் பெறுவதற்காக தனது பெற்றோருடன் ஹர்ஷித்தா சாய், இன்று காலையில் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார்.
தேசிய இருதய அறுவை சிகிச்சை கழகமான ஐஜேஎன்னில் சிகிச்சைப் பெற்று வந்த ஹர்ஷித்தா சாய், இருதய குறைப்பாட்டிற்கு நிவாரணம் காண 16 லட்சம் ரிங்கிட் அல்லது 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவில் நுட்பமான மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டியுள்ளது.
அந்த தொகையைத் திரட்டுவது ஹர்ஷித்தா சாய் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக இருந்ததால் பொதுமக்களின் உதவியை அவரது தந்தை செல்வ கணபதி நாடினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உட்பட பொது மக்கள் அளித்த நன்கொடையைப் பெற்று, சிறுமி ஹர்ஷித்தா சாயின் உயிரைக் காப்பாற்ற தந்தை செல்வ கணபதியும், தாயார் உஷாவும் தங்களின் செல்ல மகளை அழைத்துக் கொண்டு அமெரிக்கா பயணமாகினர்.
தங்களுக்கு உதவிய பொது மக்களுக்கு ஹர்ஷித்தா சாய், பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.