சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – ஏப்ரல் 23ல் வேட்புமனுத் தாக்கல்

சிங்கப்பூர், ஏப்ரல்.15-

சிங்கப்பூர் அதன் அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக, அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

வேட்புமனுத் தாக்கல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பிரதமராகவும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் லாரன்ஸ் வோங்கின் முதல் தேர்தலாக இது விளங்குகிறது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அதன் 14வது தேர்தலான இதில், 33 தொகுதிகளில் 97 நாடாளுமன்ற இடங்களுக்காக மக்கள் செயல் கட்சி போட்டியிடும். அநேகமாக அவை அனைத்திலும் எதிர்க்கட்சிகள் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS