ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. அப்படம் தற்போது அனைவராலும் கொண்டாடப்பட்டும் வருகிறது. படம் வெளியாகி சில நாட்கள் ஆகியிருந்தும் கூட ஆரவாரம் குறையவில்லை.
தற்போது வரை அப்படம் ரூ.175 கோடிகளை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
குட் பேட் அக்லி படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குக் காரணம் அதில் இடம் பெற்றுள்ள பழைய பாடல்கள் தான். அதுதான் ஒட்டுமொத்த பேரையும் ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் இளையராஜாவின் பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்கள் அனுமதி இன்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சிறிது நாட்கள் இந்த ராயல்டி சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கி இருக்கிறது.