அஜித்குமார் நடிப்பிலான குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ. 170 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாம். இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் வில்லன் அர்ஜூன் தாஸ். அதுவும் இரட்டை வேடத்தில் நடித்து அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் வரும் இந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அர்ஜுன் தாஸ் இல்லையாம். நடிகர் எஸ்.ஜே. சூர்யா தான் வில்லனாக நடிக்கவிருந்தாராம். தமிழ், தெலுங்கு என தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
இவர் குட் பேட் அக்லி படத்தில் முதலில் வில்லனாக நடிக்கவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய் விட்டது. அதன்பின் தான் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார் எனக் கூறப்படுகிறது.