கோலாலம்பூர், ஏப்ரல்.15-
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், மத போதகர் முகமட் ரஷிக் முக்மட் அல்விக்கு எதிராகத் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் கைரி 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியிருந்தார். கைரியின் வழக்கறிஞர் அப்துல் ரஷிட் இஸ்மாயில் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்திய தகவலின்படி, நீதிபதி டத்தோ ராஜா அஹ்மாட் மோஸானுடின் ஷா ராஜா மோஸான் இன்று வழங்கவிருந்த தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைரியின் மாமனார், ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி, நேற்று இரவு 7.10 மணிக்கு காலமானதால், இன்று காலை வழங்கவிருந்த தீர்ப்பை ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதித்தது.