ரோட்ஸியா இஸ்மாயில் தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார்

ஷா ஆலாம், ஏப்ரல்.15-

ஷா ஆலாம் பிகேஆர் தேர்தலில் தோல்வியடைந்த ரோட்ஸியா இஸ்மாயில், தனது குழுவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததைச் சுட்டிக் காட்டி தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார். வாக்குப்பதிவு முறையில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து கட்சித் தேர்தல் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வாக்களிப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சில வாக்குகள் பதிவாகாமல் போயிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குளறுபடிகள் சரி செய்யப்படும் வரை மற்ற மாநிலங்களின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS