ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.15-
பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் டத்தோ முருகையா, அவர் தம் குழுவோடு அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தர்ராஜூ சோமுவும் இணைந்து, வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீட்டின் சாவியை வழங்கினார்.
இந்தக் குடும்பம், சமீபத்தில் பாடாங் கோத்தா பகுதியில் ஆதரவற்ற நிலையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம்மின் உதவியுடன், அவர்கள் ஒரு வாரம் சமூக நலத்துறையின் தற்காலிக தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுந்தர்ராஜூ குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று, சுந்தர்ராஜு நேரில் சென்று அவர்களைப் புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்று, அதன் சாவியை வழங்கினார். இந்தக் குடும்பத்தில் உள்ள இரண்டு சிறு குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிச் செய்வதற்காக, பினாங்கு மாநில அரசாங்கத்தின் சிறப்பு முயற்சியின் பேரில் இந்த உதவி வழங்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிட்டார்.