ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.16-
நேற்று நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த அடை மழையில் பினாங்கு மாநிலத்தில் திமோர் லாவுட் மற்றும் செபராங் பெராய் தெங்கா ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
திமோர் லாவுட் மாவட்டத்தில் ஜாலான் பி.ரம்லி, கம்போங் மஸ்ஜிட் மற்றும் செபெராங் பெராய் தெங்கா மாவட்டத்தில் தாமான் சியாகாப் ஆகிய பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், நிர்வாரண மையங்களுக்கு இடம் மாற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.