சீன அதிபருக்கு மகத்தான வரவேற்பு

கோலாலம்பூர், ஏப்ரல்.16-

மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு இன்று இஸ்தானா நெகாராவில் மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள ஸீ ஜின்பிங், காலை 10 மணிளவில் இஸ்தானா நெகாராவை வந்தடைந்த போது, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எதிர்கொண்டு வரவேற்றார்.

பின்னர் ஸீ ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பளத்தில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டதுடன், மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

WATCH OUR LATEST NEWS