கோலாலம்பூர், ஏப்ரல்.16-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு, திருச்சிக்கு 14 வகையான விலங்கினங்கள் கடத்தப்படும் முயற்சி வெற்றிகரமாக முறிடியக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் உதவி போலீஸ்காரர்கள் மற்றும் வன விலங்கு, தேசியப் பூங்கா இலாகாவான பெர்ஹிலிதான் அதிகாரிகள், ஓர் இந்தியப் பிரஜையான பயணி ஒருவரை தடுத்து நிறுத்தி, அவரின் பயணப் பெட்டிகளைச் சோதனை செய்த போது அந்த 14 விலங்கினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரிய வகை ஆப்பிரிக்க ஆமைகள், சுலாவேசி வெப்ப மண்டப ஆமைகள், உடும்புகள் உட்பட 14 வகையான விலங்கினங்களின் மதிப்பு 13 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பெர்ஹிலிதான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த இந்தியப் பிரஜை, 2010 ஆம் ஆண்டு கொடிய விலங்கினங்கள் புனர்வாழ்வு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.