மெதுவோட்டத்தில் ஈடுபட்ட பெண் மானபங்கம், மாற்றுத் திறனாளிக்கு 3 மாதச் சிறை

ஆயர் குரோ, ஏப்ரல்.16-

மலாக்கா, புக்கிட் செரிண்டிட் அருகில் உள்ள உடற்பயிற்சி பூங்காவில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த இளம் பெண்ணை மானபங்கம் புரிந்த குற்றத்திற்காக மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தது.

28 வயது முகமட் ரிட்ஸுவான் யூசோப் என்ற அந்த மாற்றுத் திறனாளி, மாஜிஸ்திரேட் ஷார்டா ஷெயின்ஹா முகமட் சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மெது ஓட்டத்தில் ஈடுபட்டு இருந்த 20 வயது தாதியரைப் பின்புறமாகத் திடீரென்று கட்டிப் பிடித்து, ஆபாசச் சேட்டைப் புரிந்ததாக அந்த மாற்றுத்திறனாளிக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாற்றுத் திறனாளி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS