பினாங்கு, பத்து காவான் சாலை துன் அப்துல்லா அகமட் படாவி சாலையாக பெயர் மாற்றம் காணும்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.16-

கடந்த திங்கட்கிழமை காலமான நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் பெயர், பினாங்கில் உள்ள பிரதான சாலை ஒன்றுக்கு சூட்டப்படும் என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் இன்று அறிவித்துள்ளார்.

பினாங்கின் பிரதான சாலைகளில் ஒன்றான பத்து காவான் சாலைக்கு துன் அப்துல்லா அகமட் படாவியின் பெயர் சூட்டப்பட்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

பினாங்கில் பாயான் லெப்பாஸ், கம்போங் பெர்லிசில் பிறந்து வளர்ந்தவரான துன் அப்துல்லா, நாட்டின் ஐந்தாவது பிரதமர் என்ற முறையில் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்கும், பங்களிப்புக்கும் கெளரவிக்கும் வகையில் அவரின் பெயர், பிரதான சாலைக்கு சூட்டப்படும் என்றுசோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் பத்து காவான், லெபுராயா பண்டார் காசியா சாலைக்கு அந்த உன்னதத் தலைவரின் பெயரைச் சூட்டுவதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு எடுத்துள்ளனர் என்று சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS