ஆசிரியைக்கு ஆபாசப் படங்கள் – ஆசிரியர் கைது

ஜோகூர் பாரு, ஏப்ரல்.16-

தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியைக்கு ஆபாசத் தன்மையிலான வாசகங்கள் மற்றும் படங்களை அனுப்பி, பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் ஆசிரியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய அந்த ஆசிரியர் ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

முன்னதாக, அந்த ஆசிரியர் இன்று காலையில் ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

இடைநிலைப்பள்ளி ஆசிரியரான அந்த நபர், அண்மைய காலமாகவே சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS