கோலாலம்பூர், ஏப்ரல்.16-
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவை லிட்டருக்கு 10 காசு விலை குறைந்துள்ளது.
லிட்டருக்கு 3 ரிங்கிட் 28 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் ரோன் 97, 3 ரிங்கிட் 18 காசுக்கு விலை குறைந்துள்ளது.
லிட்டருக்கு 2 ரிங்கிட் 98 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், 2 ரிங்கிட் 88 காசுக்கு விலை குறைந்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து 2 ரிங்கிட் 05 காசுக்கு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.