டிஜிட்டல் மயமாக்குதல் பயிற்சித் திட்டம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.16-

மலேசிய இந்திய திறன் முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விநியோகச் சங்கிலி மற்றும் டிஜிட்டல் மயமாகுதல் பயிற்சித் திட்டம், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 11 தேதி வரை வரை பெட்டாலிங் ஜெயா, Mahsa Avenue -வில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஐந்து நாள் நிகழ்ச்சியில், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் உட்பட, அனைத்து வயதுடைய 50 பேர் கலந்து கொண்டனர்.

இந்த முயற்சி, விநியோகச் சங்கிலித் துறையில், பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவதையும், டிஜிட்டல் மயமாக்குதலின் முக்கியத்துவம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

மேலும் அதிகரித்து வரும் நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப உலகில் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு சமீபத்திய மாற்றங்கள் மற்றும் திறன்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடைமுறை பயிற்சி, நிபுணர் அமர்வுகள் மற்றும் நிஜ உலக பயன்பாடுகள் மூலம், பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் கருவிகள் இன்றைய தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நிலப்பரப்பை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைப் பற்றிய ஆழமான புரிதலையும் பெற்றனர்.

பங்கேற்பாளர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் பெறப்பட்டது.

சந்தைப்படுத்தல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் பயன் கிட்டிய இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அளித்த ஆதரவு மற்றும் முயற்சிகளுக்கு பங்கேற்பாளர்கள் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டனர்.

நிகழ்வின் கடைசி நாளில், அனைத்து பங்கேற்பாளர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சி முழுவதும் அவரவர் சாதனைகளின் அடையாளமாக பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS