வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தேனா?

கோலாலம்பூர், ஏப்ரல்.16-

வரும் சனிக்கிழமை கூட்டரசுப் பிரதேசம், பிகேஆர், பத்து தொகுதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதற்கும், தனது அணியில் உள்ளவர்களை வெற்றிப் பெறச் செய்வதற்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அத்தொகுதித் தலைவர் P. பிரபாகரன் மறுத்துள்ளார்.

தொகுதித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்குத் தாம் மீண்டும் களத்தில் குதித்துள்ள வேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும்படி எந்தவொரு தரப்பினரையும் தாம் கேட்டுக் கொள் என்று பிரபாகரன் விளக்கினார்.

இது குறித்து கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழு விசாரணை செய்யுமானால் முழு ஒத்துழைப்பை நல்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக மித்ரா பணிக்குழுத் தலைவருமான பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைப் போல் வெளியாகியுள்ள காணொளி ஒன்று, தமக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரபாகரன் விளக்கினார்.

தாம் வழங்கிய தலா 100 ரிங்கிட் தொகையானது, தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுவதற்கு முன்பு தொகுதி மக்களுக்கு சேர்ப்பிக்கப்பட்ட ஹரிராயா அன்பளிப்பாகும் என்று பிரபாகரன் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS