கோலாலம்பூர், ஏப்ரல்.16-
வர்த்தகம் மற்றும் தொழில் துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது குறித்து மலேசியாவும், சீனாவும் இன்று பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன.
சேவைத் துறையில் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வது மற்றும் தொழில் துறைகளில் கூட்டு ஒத்ழைப்பை வலுப்படுத்திக் கொள்வது ஆகியவை அந்த உடன்பாடுகளில் அடங்கும்.
சீன அதிபர் ஸீ ஜின்பிங், மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அதிகாரத்துவ வருகையையொட்டி பல்வேறு கருத்திணக்க ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
அதிபர் ஸீ ஜின்பிங் மற்றும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்தான இந்த கருத்திணக்க ஒப்பந்தங்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன.
இரண்டு நாடுகள், இரட்டை பூங்காக்கள் சீனா – மலேசியா என்ற தலைப்பில் இந்த கருத்திணக்க ஒப்பந்தங்கள் இணக்கம் காணப்பட்டன. இதில் AI செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டில் தொழில்நுட்பத் துறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.