கோலாலம்பூர், ஏப்ரல்.17-
கோல சிலாங்கூர் வட்டாரத்தில் கொகெய்ன், கெதாமின் முதலிய அபாயகர போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கிள்ளான் குற்றவியல் உயர் நீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய ஒரு வழக்கு தொடர்பில் R. முருகையா ராஜப்பன் என்பவர், அரச மலேசிய சுங்கத்துறைத் தலைமையகத்தின் அமலாக்கத் தரப்பினரால் தற்போது தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
முரு என்று சுருங்க அழைக்கப்படும் ஓர் உள்ளூர்வாசியான 58 வயதுடைய அந்த நபரின் ஆகக் கடைசியான முகவரி எண்.2, ஜாலான் புளோரா 3, தாமான் சௌஜானா உத்தாமா, சுங்கை பூலோ என்பதாகும்.
முருகையா ராஜப்பன் குறித்து தகவல் கொண்டிருப்பவர்கள் 03-88822100 அல்லது 013- 9551598 என்ற தொலைபேசி எண்களில் அஹ்மாட் பாஃட்லி முகமட், அல்லது அருகில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சுங்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.