மூவார், ஏப்ரல்.17-
தொழிற்சாலைப் பேருந்துடன் கார் ஒன்று எதிரும் புதிருமாக மோதியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் சால்லே – புக்கிட் பாசீர் சாலையில் நிகழ்ந்தது.
பெரோடுவா அஸியா காரில் பயணித்த 21 வயது நுர் அய்மான் முகமட் அஸாரி மற்றும் 26 வயது அமார் ஜஸ்லி யுசோப் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
கடும் காயங்களுக்கு ஆளான அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மூவார் தீயணைப்பு நிலைய கமாண்டர் முகமட் பாஃஸ்லி மாட் ஜினின் தெரிவித்தார்.