எஸ்பிஎம் தேர்வு முடிவு, ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியிடப்படும்

புத்ராஜெயா, ஏப்ரல்.17-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வியாாக்கிழமை வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் நாடு தழுவிய நிலையில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 956 மாணவர்கள் அமர்ந்தனர்.

அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவுகளை அஞ்சல் வழி பெற்றுக் கொள்ளலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS