ஜோகூர் பாரு, ஏப்ரல்.17-
அண்மையில் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகளை இழந்த 1,089 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஃஸி அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நிவாரண மையங்களில் தங்கி, தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ஜோகூர் மாநில அரசு 32 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக டத்தோ ஓன் ஹாபிஃஸ் குறிப்பிட்டார்.