மூன்று வயது சிறுவன் குளத்தில் மூழ்கி மரணம்

பாலிக் பூலாவ், ஏப்ரல்.17-

கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்கு தனது தந்தையுடன் சென்ற 3 மூன்று வயது சிறுவன் ஒருவன், தங்கும் விடுதியில் குளத்தில் மூழ்கி மரணமுற்றான்.

இந்தச் சம்பவம், நேற்று இரவு 10 மணியளவில் பினாங்கு, தெலுக் கும்பார், இனாப் டேசா விடுதியில் நிகழ்ந்தது.

பினாங்கில் தனக்கு நன்று அறிமுகமான நண்பரைச் சந்திப்பதற்காக அந்த 3 வயது சிறுவன் உட்பட மூன்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு 46 வயதுடைய நபர், சென்றிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இப்பயணத்தின் போது அந்த சிறார்களின் தாயார் உடன் வரவில்லை. தங்கும் விடுதியில் விடப்பட்ட பிள்ளைகளைக் காணவில்லை என்பதை அறிந்து, அவர்களைத் தேடிக் கொண்டு அந்த நபரின் நண்பர் சென்ற போது அந்த 3 மூன்று வயது சிறுவன் நீரில் மூழ்கி விட்டது அறிய வந்ததாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி ஆடாம் தெரிவித்தார்.

தந்தையின் கவனக்குறைவு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS