சிரம்பான், ஏப்ரல்.17-
நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு மாவட்டத்தில் கிராம நிர்வாக மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
60 வயது மதிக்கத்தக்க அந்த நபர், மன்றத்தின் கணக்கில் உள்ள பணத்தைத் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொண்டதாக நம்பப்படுகிறது.
நேற்று கைது செய்யப்பட்ட அந்த நபர், இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு எஸ்பிஆர்எம், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.