தாப்பா, ஏப்ரல்.17-
நில நடுக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மியன்மார் நாட்டில் தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிக்கும் திட்டத்தை மலேசியா ஒத்தி வைத்துள்ளது.
இதற்கான அடிப்படை வேலைகளைச் செய்வதற்கு மலேசியாவைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று, நேற்று மியன்மாருக்கு அனுப்பப்படவிருந்ததாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
எனினும் தற்காலிக மருத்துவமனைக் கட்டப்படுவதற்கான வியூகம் நிறைந்த இடத்தை அந்நாட்டு அரசாங்கம் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறது. எனவே மருத்துவமனையைக் கட்டும் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு மலேசியாவை அந்த நாடு கேட்டுக் கொண்டு இருப்பதாக முகமட் ஹசான் குறிப்பிட்டார்.