ஈப்போ, ஏப்ரல்.17-
பேரா, மெங்லெம்பு, தாமான் ராசி ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் ஈப்போ மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை, பெரும் சர்ச்சையான சம்பவம், இன்று நல்ல முறையில் தீர்வு காணப்பட்டது.
உணவகத்தின் முன் சட்டவிரோதமாகப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மேஜைகள் மற்றும் நாற்காலிகளைப் பறிமுதல் செய்வதற்கு ஈப்போ மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையில் அதிருப்தியுற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், அமலாக்க அதிகாரி ஒருவரின் முகத்திலேயே குத்தியதாகக் கூறப்படுகிறது.
நேற்று காலையில் நிகழ்ந்த நிகழ்ந்த இந்த சர்ச்சை, ஜெலாபாங் சட்டமன்ற உறுப்பினர் சியா போவ் ஹியான் மற்றும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீ சுவான் ஹோவ் ஆகியோரின் தலையீட்டின் பேரில், ஈப்போ மாநகர் மன்றத்துடன் இவ்விவகாரம் நல்ல முறையில் தீர்வு காணப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்க அதிகாரிகளுக்கும், வணிகர்களுக்கும் இடையில் இவ்விவகாரம் தீர்வு காணப்பட்டு விட்டதை ஈப்போ மாநகர் மன்றத்தின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் அஹ்மாட் ஸையாடி சுடின் உறுதிப்படுத்தினார்.