கோலாலம்பூர், ஏப்ரல்.17-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்புடைய படத்தைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஓர் உள்ளடக்கம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முகநூலில் வெளியிடப்பட்ட அந்த உள்ளடக்கம், மாமன்னரை அவமதிக்கும் தன்மையில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதால் அது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.