இரண்டு முதன்மை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.17-

தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட படத்தில் மலேசியாவின் ஜாலோர் கெமிலாங் கொடியில் பிறை சின்னம் இல்லாததைத் தொடர்ந்து நாட்டின் முதன்மை சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லியின் இரு முதன்மை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் சான் அவுன் குவாங் மற்றும் துணைத் தலைமை ஆசிரியர் ஆகிய இருவருக்கு எதிராக அந்த சீனப் பத்திரிக்கை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்விரு ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று சின் சியூ டெய்லி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விசாரணை முடியும் வரையில் அவ்விரு ஆசிரியர்களும் பணி இடை நீக்கத்தில் இருப்பர் என்று அது தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS