கோலாலம்பூர், ஏப்ரல்.17-
மலேசியாவிற்கு சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் அதிகாரத்துவ வருகையையொட்டி தனது முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடி வரைப்படத்தில் பிறை சின்னம் இல்லாமல் இடம் பெற்றது தொடர்பில் முன்னணி சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் கிராப்பிக் வடிவமைப்பாளர் ஆகியோரை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கைது செய்துள்ளது.
விசாரணைக்காக இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வரவழைக்கப்பட்ட அவ்விருவரும், வாக்குமூலப் பதிவிற்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
அந்த இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதை உறுதிச் செய்த ஐஜிபி, தேசியக் கொடி வரைப்படத்தை வடிவமைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.
அந்த இருவரும் இன்றிரவு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதையும் அவர் கோடி காட்டினார்.