இளையோர்கள் மத்தியில் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு, அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது

கோலாலம்பூர், ஏப்ரல்.18-

பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் பாலியல் பலாத்காரம் மற்றும் தகாத உறவுப் போன்ற பாலியியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை ஒற்றுமை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒழுக்கக்கேடானச் சம்பவங்கள் அதிகரித்து வருவது, சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மிகக் குறைந்த வயதில் தகாத உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமான செயல் அல்ல என்பதுடன் இது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகி விடும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

இளையோர்கள் குறிப்பாக வயது குறைந்தவர்கள் மத்தியில் இத்தகைய சமூகவியல் சீர்கேடுகள் அதிகரிப்பு, இளையோர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடிய சமிக்ஞையாகவே இதனைக் கருத வேண்டும் என்று டத்தோ டாக்டர் முகமட் நாயிம் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS