போர்ட்டிக்சன், ஏப்ரல்.18-
சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28.3 ஆவது கிலோ மீட்டரில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் சம்ந்தப்பட்ட விபத்தில் 18 வயது கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் நிகழ்ந்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.
ஆறு மோட்டார் சைக்கிள்களும் மிக நெருக்கமாகச் சென்று கொண்டிருந்த போது ஒன்று மற்றொன்றுடன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் கடும் காயங்களுக்கு ஆளான 18 வயதுடைய அந்த கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.