லிட்டில் டாக்காவில் 506 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஏப்ரல்.18

கோலாலம்பூர் மையப் பகுதியில் மேடான் இம்பி, லிட்டில் டாக்காவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயண ஆவணமின்றி காணப்பட்ட 506 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

வங்காளதேசிகளின் ஆக்கிரமிப் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள லிட்டில் டாக்காவில் நேற்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

நெகிரி செம்பிலான் குடிநுழைவு இலாகா மற்றும் தேசிய பதிவு இலாகா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேடான் இம்பியில் உள்ள நான்கு மாடி கட்டத்தின் 6 தொகுதிகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வோர் அறையும் 600 ரிங்கிட் வாடகை என்ற அளவில் வங்காளதேசிகளும், இதர வெளிநாட்டுவர்களும் அந்தக் கட்டடத்தில் சொகுசாகத் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிக்க கட்டத்திலிருந்து குதிக்க முற்பட்ட இரு வெளிநாட்டவர்கள் காயத்திற்கு ஆளாகினர்.

WATCH OUR LATEST NEWS