ஜோகூர் பாரு, ஏப்ரல்.18
ஜோகூர் பாரு, பாங்குனான் சுல்தான் இஸ்கண்டார் கட்டட வளாகத்தில் போலீசாரின் சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பிச் சென்ற 27வயது நபர் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணியளவில் போலீசாரிடம் மிக ஆவேசமாக நடந்து கொண்ட அந்த நபர், கடமையில் இருந்த இரண்டு போலீஸ்காரரிகளிடம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக ஜோகூர் பேஉ செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.