கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் பிரேதங்கள் குளிப்பாட்டும் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது

கிள்ளான், ஏப்ரல்.18-

கோவிட்-19 பெருந்தொற்று காலக் கட்டத்தில் மூடப்பட்ட கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் பிரேதங்களைக் குளிப்பாட்டும் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பகுதி மீண்டும் திறக்கப்படுவதற்கு அனுமதி அளித்த மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் செல்வமலருக்கு தேசிய மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் செல்வேந்திரன் முனியாண்டி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கோவிட்-19 காலக் கட்டத்தில் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தப் பகுதி மூடப்பட்டது. பின்னர், அந்த நோய் பரவலிலிருந்து நாடு கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பியது. எனினும் மருத்துவமனையின் பிரேதங்களைக் குளிப்பாட்டும் பகுதி மட்டும் நீண்ட காலமாகவே திறக்கப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில் இறந்தவரின் உடலை இறுதிக் காரியங்களுக்கு தயார் செய்யும் வகையில் இந்தப் பகுதி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் கோரிக்கை மனு ஒன்றை தாம் வழங்கியதாக செல்வேந்திரன் விவரித்தார்

மரியாதை நிமித்தமாக மருத்துவமனைக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வருகையின் போது தேசிய மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் செல்வேந்திரனோடு வுஃனெரல் நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ ருவேன் ஷர்மா, கைலாசம் , ஷா ஆலாம் காஸ்கெட் நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ ஶ்ரீ குணேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS