நில அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

குவாந்தான், ஏப்ரல்.18-

பகாங் மாநில அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மேன்தை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அறைகூவல் விடுத்துள்ளார்.

அரசு நிலங்களை சட்டவிரோத விளைச்சல் நிலங்களாக ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடாது. பகாங் மாநிலத்தில் 14 ஆயிரத்து 494 .9 ஹெக்டர் பரப்பிலான நிலங்கள், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டு, பலதரப்பட்ட தானிய வகைகள் பயிரப்பட்டு வருவதாக சுல்தான் குறிப்பிட்டார்.

அதே வேளையில் பகாங் அரசுக்குச் சொந்தமான நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்ட 5 ஆயிரத்து 997.09 ஹெக்டர் வனப் பகுதியிலும் அத்துமீறல்கள் நடந்திருப்பதாக சுல்தான் தெரிவித்தார்.

விவசாயம் என்ற பெயரில் பகாங் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சூறையாடப்படுவது ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று சுல்தான் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

ரவூப்பில் சட்டவிரோதமாக நடவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 200 க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்களைப் பகாங் அரசு வெட்டிச் சாய்த்த சம்பவத்தைத் தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS