ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.18-
கல்வி முறையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்படுவதை கல்வி அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் செயல்பாட்டு மையங்களை கல்வி தொழில்நுட்பத்திற்கான சிறந்த மையங்களாக மேம்படுத்துவது உட்பட துணைத் திட்டங்களையும் கல்வி அமைச்சு தயாரித்து வருவதாக பாஃட்லீனா கூறினார்.
வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகளைப் பொருத்துவதற்கான இலக்கு நிறைவேற்றப்படும் என்று பாஃட்லீனா நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பினாங்கு பள்ளிகளுக்கான ஸ்மார்ட் போர்டுகளை ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.