எடிசன் திரை விருது விழாவிற்கு பினாங்கு மாநில முதல்வர் அவர்களுக்கு அழைப்பு

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.18-

17ஆம் ஆண்டு எடிசன் திரை விருது விழா பினாங்கு மாநிலத்தில் உள்ள ஸ்பைஸ் அரேனாவில் வரும் மே மாதம் 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

அந்நிகழ்விற்கு தமிழகத்தில் இருந்து சுமார் 50 நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், நகைச்சுவை கலைஞர்கள், எடிட்டர்கள், கேமராமேன்கள், போன்றவர்கள் விருது பெற உள்ளனர்.
மலேசிய கலைஞர்கள் 50க்கும் மேற்பட்ட நடனம், பாடல்கள், பேஷன் ஷோ போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். அந்நிகழ்விற்கு பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தர் ராஜு தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர், பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளனர்.

விருதளிப்பு நிகழ்விற்கான அழைப்புகளை எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் இன்று பினாங்கு மாநில ஆட்சி மன்ற அலுவலகத்தில் சந்தித்து வழங்கினார். அப்போது பினாங்கு முதல்வர் சோவ் கோன் யூ, எடிசன் திரை விருது பினாங்கில் நடைபெறுவது சந்தோஷமான வைபவமாக இருக்கும் எனவும், நிகழ்ச்சியில் அவசியம் தாம் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார் என்பதை எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு +60166167708 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS