கோலாலம்பூர், ஏப்ரல்.18-
நிறுவனத்திற்கு சொந்தமான ரகசியம் காக்க வேண்டிய முக்கிய ஆவணங்களை அம்பலப்படுத்த முயற்சித்ததாக தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
40 வயதுடைய முகமட் கைருல் அக்மால் முகமட் ஜஸ்னி என்ற அந்த முன்னாள் நிர்வாகி, கடந்த ஆண்டு ஜுன் மாதம், பெட்ரோனாசின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாட்டுத் திறன் சம்பந்தப்பட்ட முக்கிய ரகசிய ஆவணங்களை சரவாக் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோஸிடம் அம்பலப்படுத்த முயற்சித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பத்து லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது அதற்கு நிகரான சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் நிர்வாகி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.