ஜாலோர் கெமிலாங் கொடி விவகாரம் – விசாரணை முடிவடைந்தது

பெட்டாலிங் ஜெயா,

ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடி வரைப்படத்தை பிறை சின்னமின்றி பிரசுரித்தது தொடர்பில் சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லி மற்றும் அந்தப் படத்தை மறு பிரசுரம் செய்த மற்றொரு சீனப் பத்திரிகையான குவோங் வா ஆகியவற்றுக்கு எதிராக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி மேற்கொண்ட விசாரணை முடிவுற்றது.

இதனை அரசாங்கப் பேச்சாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
அவ்விரு சீனப் பத்திரிகைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு, அதன் அறிக்கை துணை பப்ளிக் பிராசிகிட்டர் அலுவலகத்தில் சமர்பிக்கப்படும் என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி அவ்விரு பத்திரிகைகளும் தற்போது உள்துறை அமைச்சு மற்றும் போலீஸ் துறையின் விசாரணையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சு, 1984 ஆம் ஆண்டு அச்சகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்து வருவதாகதவும் அவர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS