பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.18-
பிகேஆர். கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில் மர்ம நபர்கள் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலேஹா முஸ்தஃபா மறுத்துள்ளார்.
அப்படி மர்ம நபர்கள் யாரும் தலையிடவில்லை என்று அவர் விளக்கினார். தொகுதி அளவிலான தேர்தலில் நடப்புத் தலைவர் சிலர் தோல்விக் கண்டதற்கு மர்ம நபர்களின் தலையீடுகளே காரணம் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று டாக்டர் ஸாலேஹா விளக்கினார்.
தற்போது நடைபெற்று வரும் தொகுதித்க் தேர்தலில் மர்ம நபர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, தேர்தல் முடிவை நிர்ணயிக்கின்றனர் என்று கூறப்படுவது ஏற்கத் தக்கது அல்ல என்று ஸாலேஹா தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில் தொகுதித் தேர்தல் தொடர்பில் அளிக்கப்படும் எந்தவொரு புகாரின் உண்மைத்தன்மையையும் ஆராய தேர்தல் குழு தயாராக இருக்கிறது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.