பேங்காக், ஏப்ரல்.18-
ஒரு தலைப்பட்சமாக விதிக்கப்படும் எந்தவொரு வரியையும் ஆசியான் நிராகரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏனெனில், இத்தகைய வரி விதிப்பு முறையானது, பன்முகத்தன்மையின் உணர்வுக்கு முரணானது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தாய்லாந்துக்கு இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த புதிய வரி முறை குறித்து தாய்லாந்து பிரதமர் Paetongtarn Shinawatra -வுடன் விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார்.
இதன் தொடர்பில் ஆசியான் வர்த்தக மற்றும் நிதி அமைச்சர்களின் கூட்டங்கள், அமெரிக்கா விதித்துள்ள வரியை முன்னிலைப்படுத்தி விவாதிக்கும் முக்கியக் களமாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.