மின்னியல் சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்படலாம்

ஷா ஆலாம், ஏப்ரல்.19-

பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வரும் வேப் எனப்படும் மின்னில் சிகரெட்டுகள் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த சிலாங்கூர் மாநிலத்தில் அவ்வகை சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்படலாம் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜோகூர் மாநிலத்தில் மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோகூர் மாநிலத்தைப் பின்பற்றி சிலாங்கூரும் மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

மின்னியல் சிகரெட்டில் போதைப்பொருள் கலந்த திரவம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மின்னியல் சிகரெட்டுகளுக்கு சிறார்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த மோகம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவது குறித்து தற்போது மாநில அரசு ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS