ஷா ஆலாம், ஏப்ரல்.19
சட்டவிரோதமாகப் பிள்ளைகளை வாங்குவதற்கும், அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும் மோசடி கும்பல் ஒன்று, 5 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை கையூட்டாக பெற்றுள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தக் கும்பல் தனது மோசடி நடவடிக்கையின் மூலம் 4 லட்சம் ரிங்கி வரை வரை பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத நடவடிக்கையின் வாயிலாக பண வர்த்தனைகள் நடத்துள்ளன என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள்
கூறுகின்றன.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு மூளையாகச் செயல்பட்ட அந்த கும்பலின் முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட கும்பலின் இந்த சட்டவிரோத நடவடிக்கை அம்பலமானது.
இது தொடர்பாக கடந்த புதன்கிழமை 28 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 14 பேரை எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. அவர்களை ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.