லியான் லியூ என்பவரைப் போலீஸ் தேடி வருகிறது

மலாக்கா, ஏப்ரல்.19-

வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது வெடிகுண்டு வைக்குமாறு தூண்டி விட்டது உட்பட அவமதிப்புத் தன்மையிலான கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததற்காக சமூக வலைத்தளத்தில் லியான் லியூ என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர், நிந்தனைத் தன்மையிலான கருத்தைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பதைக் கண்ணுற்ற 68 வயது வணிகர் ஒருவர் இது குறித்து மலாக்கா, சுங்கை ஊடாங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமயத்திற்கு எதிராக நிந்தனைத் தன்மையில் கருத்தை பதிவேற்றம் செய்துள்ள அந்த நபருக்கு எதிராக வணிகர் ஒருவர் போலீஸ் புகார் அளித்து இருப்பதை மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS