கெனிஙாவ், ஏப்ரல்.19-
தங்களின் இரண்டு மாடித் தரை வீட்டில் ஏற்பட்ட தீயில், உடமைகளைக் காப்பாற்றுவதற்கு , தீ ஜுவாலைக்கு மத்தியில் நுழைந்த கணவன், மனைவி கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சபா, கெனிஙாவ், கம்போங் துடான் பாருவில் நிகழ்ந்தது.
இதில் கடும் தீக் காயங்களுக்கு ஆளாகிய 43 வயது கணவரும், 42 வயது மனைவியும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் கொழுந்து விட்டு எரிந்த தீ, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எழுவர் கொண்ட தீயணைப்பு குழுவினரால் கட்டுப்படுத்தப்பட்டது.