பிந்துலு, ஏப்ரல்.19-
4 வீல் டிரைவ் வாகனமும், காரும் மோதிக் கொண்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் நேற்றிரவு 11.50 மணியளவில் பிந்துலு, பாராகோன் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.
34 மற்றும் 44 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.