மீரி, ஏப்ரல்.19-
மலேசிய தேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங்கின் வரைப்படத்தில் பிறை சின்னமின்றி, முழுமையற்ற நிலையில் பிரசுரித்து இருக்கும் சீன முன்னணிப் பத்திரிகையான சின் சியூ டெய்லி, அத்தகையத் தவறு நிகழ்வதற்கு தீய நோக்கத்துடன் செயல்பட்டிருக்க சாத்தியமில்லை என்று மீரி எம்.பி. சியூ சூன் மான் தெரிவித்தார்.
இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இதனை ஒரு படிப்பிணையாக அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இவ்விவகாரத்தை ஆளுக்கு ஆள் மிகைப்படுத்திக் கொண்டு இருக்கும் போக்கை நிராகரிப்போம் என்று அந்த எம்.பி. குறிப்பிட்டார்.
இத்தகையத் தவறு நிகழ்ந்து இருப்பதற்கு அந்த முன்னணி பத்திரிகை தீய நோக்கத்துடன் செயல்பட்டு இருக்க சாத்தியம் இல்லை.
அதே வேளையில் ஆசிரியர் பிரிவில் கவனக்குறைவாகச் செயல்பட்டதற்கும், தீய நோக்கத்துடன் செயல்பட்டதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று சியூ சூன் மான் வலியுறுத்தினார்.